திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை நேற்று இரவு எட்டரை மணிக்கு ஏகாந்த சேவைக்கு பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு அடைக்கப்பட்டது.
திருப்பதி மலைக்கு கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாகப் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் திருப்பதி மலை ஒரே ஒரு பக்தர் கூட இல்லாமல் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
திருப்பதி மலையில் உள்ள தங்கும் அறைகள் அனைத்தையும் பக்தர்கள் வருகை இல்லாத காரணத்தால் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாலை இரண்டரை மணிக்குத் திறக்கப்பட்டு 3 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் பக்தர்களுக்கான தரிசன அனுமதி வழங்கப்படும்.
பக்தர்கள் வருகைக்குத் தடைவிதிக்கப்பட்ட இரண்டாம் நாளான நேற்றும் வழக்கம் போல் அதிகாலை இரண்டரை மணிக்குக் கோவில் திறக்கப்பட்டு, ஏழுமலையானுக்குச் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, நைவேத்தியம் ஆகிய கைங்கரிய சேவைகள் நடத்தப்பட்டன.
பக்தர்கள் வருகை இல்லாத காரணத்தால் ஏழுமலையான் கோவில் வழக்கத்துக்கு மாறாக வெறிச்சோடிக் காணப்பட்டது.
மேலும் பக்தர்கள் வருகை இல்லாததால் இரவு ஒன்றரை மணிக்கு நடத்தப்படும் ஏகாந்த சேவை நேற்று இரவு எட்டரை மணிக்கு நடத்தப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது.