டில்லி
ரஷ்ய நாட்டில் இருந்து 20.79 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் நேற்று இந்தியாவுக்கு வந்துள்ளன.
நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது இந்தியாவில் மூன்று மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி இந்தியாவில் இன்னும் தொடங்கவில்லை.
எனவே இந்த தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த மருந்துகள் முன்பு 2,10 லட்சம் டோஸ்கள் வந்தன. அதன் பிறகு மீண்டும் இருமுறை வந்தன. நேற்று அதிக அளவாக 20.79 லட்சம் டோஸ்கள் ரஷ்யாவின் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளன. மொத்தம் சென்ற மாதம் மட்டும் 30 லட்சம் டோஸ்கள் ந்துள்ளன.
அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியா 1.50 கோடி டோஸ்கள் வாங்கத் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே வந்துள்ள தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் மாதத்தில் சுமார் 50 லட்சம் டோஸ்களும் ஜூலை மாதத்தில் ஒரு கோடி டோஸ்களும் கொள்முதல் செய்யப்பட உள்ளன.