டில்லி
இந்தியாவில் நேற்று 46,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,25,57,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,265 அதிகரித்து மொத்தம் 3,25,57,767 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 605 அதிகரித்து மொத்தம் 4,36,396 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 34,242 பேர் குணமாகி இதுவரை 3,17,81,046 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,27,571 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 5,031 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,37,680 ஆகி உள்ளது நேற்று 216 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,36,571 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,380 பேர் குணமடைந்து மொத்தம் 62,47,414 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 50,183 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 31,445 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 38,83,429 ஆகி உள்ளது. இதில் நேற்று 217 பேர் உயிர் இழந்து மொத்தம் 19,974 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 20,271 பேர் குணமடைந்து மொத்தம் 36,92,628 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,70,312 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,224 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,42,250 ஆகி உள்ளது இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,206 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,668 பேர் குணமடைந்து மொத்தம் 28,85,700 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 19,318 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,573 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,05,647 ஆகி உள்ளது இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,788 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,668 பேர் குணமடைந்து மொத்தம் 25,52,507 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,352 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1601 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,06,191 ஆகி உள்ளது. நேற்று 16 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,766 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,797 பேர் குணமடைந்து மொத்தம் 19,78,364 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,061 பேர் சிகிச்சையில் உள்ளனர்.