டில்லி

ந்தியாவில் நேற்று 43,068 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,28,10,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,068 அதிகரித்து மொத்தம் 3,28,10,892 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 462 அதிகரித்து மொத்தம் 4,39,054 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 34,105 பேர் குணமாகி  இதுவரை 3,19,86,322 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,72,722 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,196 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,64,876 ஆகி உள்ளது  நேற்று 104 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,37,313 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,688 பேர் குணமடைந்து மொத்தம் 62,72,800 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 51,238 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 30,203 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 40,57,253 ஆகி உள்ளது.  இதில் நேற்று 118 பேர் உயிர் இழந்து மொத்தம் 20,788 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 20,687 பேர் குணமடைந்து மொத்தம் 38,17,004 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,18,921 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,217 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,49,445 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,318 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,398 பேர் குணமடைந்து மொத்தம் 28,93,715 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,386 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,512 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,14,872 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,921 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,725 பேர் குணமடைந்து மொத்தம் 25,63,101 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,850 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,115 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,14,116 ஆகி உள்ளது.  நேற்று 19 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,857 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,265 பேர் குணமடைந்து மொத்தம் 19,85,566 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,693 பேர் சிகிச்சையில் உள்ளனர்.