டில்லி

ந்தியாவில் நேற்று 42,797 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,18,10,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,797 அதிகரித்து மொத்தம் 3,18,10,782 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 532 அதிகரித்து மொத்தம் 4,26,321 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 39,304பேர் குணமாகி  இதுவரை 3,09,67,223 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,04,648 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,126 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,27,194 ஆகி உள்ளது  நேற்று 108 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,33,410 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,436 பேர் குணமடைந்து மொத்தம் 61,17,560 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 72,810 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 22,414 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 34,71,563 ஆகி உள்ளது.  இதில் நேற்று 108 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,212 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,478 பேர் குணமடைந்து மொத்தம் 32,7,788 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,76,049 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,769 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,11,727 ஆகி உள்ளது  இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,680 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,714 பேர் குணமடைந்து மொத்தம் 28,50,717 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,305 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,949 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,67,401 ஆகி உள்ளது  இதில் நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,197 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,011 பேர் குணமடைந்து மொத்தம் 25,13,087 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 20,117 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,442 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,73,996 ஆகி உள்ளது.  நேற்று 16 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,444 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,412 பேர் குணமடைந்து மொத்தம் 19,40,368 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,184 பேர் சிகிச்சையில் உள்ளனர்.