டில்லி
இந்தியாவில் நேற்று 42,603 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,29,87,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42,603 அதிகரித்து மொத்தம் 3,29,87,615 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 309 அதிகரித்து மொத்தம் 4,40,567 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 38,069 பேர் குணமாகி இதுவரை 3,21,30,576 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,03,646 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 4,130 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,82,117 ஆகி உள்ளது நேற்று 64 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,37,707 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,508 பேர் குணமடைந்து மொத்தம் 62,88,851 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 52,025 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 29,682 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 41,81,137 ஆகி உள்ளது. இதில் நேற்று 142 பேர் உயிர் இழந்து மொத்தம் 21,442 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 25,910 பேர் குணமடைந்து மொத்தம் 39,09,096 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,50,097 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 988 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,54,047 ஆகி உள்ளது இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,401 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,620 பேர் குணமடைந்து மொத்தம் 28,98,874 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,412 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,575 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,21,086 ஆகி உள்ளது இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,000 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,610 பேர் குணமடைந்து மொத்தம் 25,69,771 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,315 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,502 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,19,702 ஆகி உள்ளது. நேற்று 16 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,903 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,525 பேர் குணமடைந்து மொத்தம் 19,90,916 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,883 பேர் சிகிச்சையில் உள்ளனர்.