டில்லி

ந்தியாவில் நேற்று 41,683 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,12,56,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,683 அதிகரித்து மொத்தம் 3,12,56,839 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 510 அதிகரித்து மொத்தம் 4,19,021 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 38,793 பேர் குணமாகி  இதுவரை 3,04,21,813 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,03,605 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 8,159 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 62,37,755 ஆகி உள்ளது  நேற்று 165 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,30,918 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,839 பேர் குணமடைந்து மொத்தம் 60,08,750 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 94,745 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 17,481 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 32,05,197 ஆகி உள்ளது.  இதில் நேற்று 106 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,618 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 14,131 பேர் குணமடைந்து மொத்தம் 30,59,441 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,29,640 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,639 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,88,341 ஆகி உள்ளது  இதில் நேற்று 36 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,262 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,214 பேர் குணமடைந்து மொத்தம் 28,26,411 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 26,645 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,891 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,41,168 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,809 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,423 பேர் குணமடைந்து மொத்தம் 24,81,201 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 26,158 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,527 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,46,749 ஆகி உள்ளது.  நேற்று 19 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,197 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,412 பேர் குணமடைந்து மொத்தம் 19,09,613 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,93 பேர் சிகிச்சையில் உள்ளனர்.