டில்லி

ந்தியாவில் நேற்று 35,197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,22,85,101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,197 அதிகரித்து மொத்தம் 3,22,85,101 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 440 அதிகரித்து மொத்தம் 4,32,552 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 37,136 பேர் குணமாகி  இதுவரை 3,14,78,405 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,61,446 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,408 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,01,213 ஆகி உள்ளது  நேற்று 116 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,35,255 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,424 பேர் குணமடைந்து மொத்தம் 62,01,168 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 61,306 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 21,613 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 37,24,030 ஆகி உள்ளது.  இதில் நேற்று 127 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,870 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 18,556 பேர் குணமடைந்து மொத்தம் 35,29,465 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,75,180 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,298 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,31,827 ஆகி உள்ளது  இதில் நேற்று 32 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,039 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,833 பேர் குணமடைந்து மொத்தம் 28,73,281 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,481 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,804 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,92,436 ஆகி உள்ளது  இதில் நேற்று 32 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,579 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,917 பேர் குணமடைந்து மொத்தம் 25,37,632 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 20,225 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,063 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,95,669 ஆகி உள்ளது.  நேற்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,671 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,929 பேர் குணமடைந்து மொத்தம் 19,65,657 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,341 பேர் சிகிச்சையில் உள்ளனர்.