டில்லி
இந்தியாவில் நேற்று 27,271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,37,65,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,271 அதிகரித்து மொத்தம் 3,37,65,488 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 278 அதிகரித்து மொத்தம் 4,48,372 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 28,134 பேர் குணமாகி இதுவரை 3,30,35,524 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,68,546 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 3,063 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,50,856 ஆகி உள்ளது நேற்று 56 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,067 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,198 பேர் குணமடைந்து மொத்தம் 63,71,728 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 36,484 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 15,914 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 46,80,858 ஆகி உள்ளது. இதில் நேற்று 122 பேர் உயிர் இழந்து மொத்தம் 25,087 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 16,758 பேர் குணமடைந்து மொத்தம் 45,12,662 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,42,580 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 933 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,76,000 ஆகி உள்ளது இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,794 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 704 பேர் குணமடைந்து மொத்தம் 29,25,397 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,780 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,612 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,63,789 ஆகி உள்ளது இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,578 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,626 பேர் குணமடைந்து மொத்தம் 26,11,061 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 17,150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,010 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,50,324 ஆகி உள்ளது. நேற்று 13 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,176 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,149 பேர் குணமடைந்து மொத்தம் 20,24,645 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 11,503 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி தாத்ரா – நாகர்ஹவேலி – டாமன் – டையூ பகுதியில் பாதிப்படைந்தோர் ஒருவர் கூட இல்லை.