டில்லி

ந்தியாவில் நேற்று 11,385 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,24,60,354 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,385 அதிகரித்து மொத்தம் 3,24,60,354 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 267 அதிகரித்து மொத்தம் 4,35,051 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 17,575 பேர் குணமாகி  இதுவரை 3,16,90,678 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,21,877 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,643 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,28,294 ஆகி உள்ளது  நேற்று 105 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,36,067 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,795 பேர் குணமடைந்து மொத்தம் 62,38,794 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,924 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,151 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,39,767 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,155 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,442 பேர் குணமடைந்து மொத்தம் 28,82,331 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,255 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,604 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,02,489 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,734 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,863 பேர் குணமடைந்து மொத்தம் 25,48,868 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 18,887 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,002 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,03,342 ஆகி உள்ளது.  நேற்று 12 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,735 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,508 பேர் குணமடைந்து மொத்தம் 19,75,448 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,159 பேர் சிகிச்சையில் உள்ளனர்.