டில்லி

ந்தியாவில் நேற்று 92,719 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92,719 பேர் அதிகரித்து மொத்தம் 2,90,88,176 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,222 அதிகரித்து மொத்தம் 3,53,557 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,82,280 பேர் குணமாகி  இதுவரை 2,74,96,198 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 12,26,850 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 10,891 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 58,52,891 ஆகி உள்ளது  நேற்று 702 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,01,172 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 16,577 பேர் குணமடைந்து மொத்தம் 55,80,925 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,67,927 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 9,808 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,17,289 ஆகி உள்ளது  இதில் நேற்று 179 பேர் உயிர் இழந்து மொத்தம் 32,099 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 23,449 பேர் குணமடைந்து மொத்தம் 24,60,165 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,25,004 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 15,567 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,57,962 ஆகி உள்ளது.  இதில் நேற்று 124 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,281 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 20,019 பேர் குணமடைந்து மொத்தம் 25,04,011 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,43,249 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 18,023 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 22,74,704 ஆகி உள்ளது  இதில் நேற்று 409 பேர் உயிர் இழந்து மொத்தம் 27,765 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 31,045 பேர் குணமடைந்து மொத்தம் 20,28,344 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,18,595 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 7,796 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,71,007 ஆகி உள்ளது.  நேற்று 77 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,629 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 14,641 பேர் குணமடைந்து மொத்தம் 16,51,790 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,07,588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.