டில்லி

ந்தியாவில் நேற்று 91,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91,211 பேர் அதிகரித்து மொத்தம் 2,92,73,338 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,401 அதிகரித்து மொத்தம் 3,63,097 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,33,698 பேர் குணமாகி  இதுவரை 2,77,78,894 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 11,19,928 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 12,207 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 58,76,087 ஆகி உள்ளது  நேற்று 1,915 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,03,748 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 11,449 பேர் குணமடைந்து மொத்தம் 56,08,753 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,60,693 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 11,042 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 27,39,290 ஆகி உள்ளது  இதில் நேற்று 194 பேர் உயிர் இழந்து மொத்தம் 32,485 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 15,721 பேர் குணமடைந்து மொத்தம் 24,96,132 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,10,652 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 14,424 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,88,590 ஆகி உள்ளது.  இதில் நேற்று 194 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,631 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 17,994 பேர் குணமடைந்து மொத்தம் 25,42,242 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,35,296 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 16,813 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 23,08,838 ஆகி உள்ளது  இதில் நேற்று 358 பேர் உயிர் இழந்து மொத்தம் 28,528 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 32,049 பேர் குணமடைந்து மொத்தம் 20,91,646 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,88,664 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 8,110 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,87,883 ஆகி உள்ளது.  நேற்று 67 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,763 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,981 பேர் குணமடைந்து மொத்தம் 16,77,063 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 99,057 பேர் சிகிச்சையில் உள்ளனர்.