டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,53,353 ஆக உயர்ந்து 1,54,428 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 6,253 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,07,53,353 ஆகி உள்ளது.  நேற்று 116 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,54,428 ஆகி உள்ளது.  நேற்று 6,133 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,28,109 ஆகி உள்ளது.  தற்போது 1,66,168 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,585 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,26,399 ஆகி உள்ளது  நேற்று 40 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,082 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,670 பேர் குணமடைந்து மொத்தம் 19,29,005 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 45,071 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 522 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,38,865 ஆகி உள்ளது  இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,217 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 465 பேர் குணமடைந்து மொத்தம் 9,21,122 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,029 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 5,266 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,29,179 ஆகி உள்ளது.  இதில் நேற்று 21 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,744 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,730 பேர் குணமடைந்து மொத்தம் 8,54,206 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 70,989 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 116 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,87,836 ஆகி உள்ளது  இதுவரை மொத்தம் 7,153 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 127 பேர் குணமடைந்து மொத்தம் 8,79,405 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,278 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 508 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,38,340 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,356 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 523 பேர் குணமடைந்து மொத்தம் 8,21,430 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,554 பேர் சிகிச்சையில் உள்ளனர்.