டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,082 ஆக உயர்ந்து 1,60,983 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,069 பேர் அதிகரித்து மொத்தம் 1,18,46,082 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 257 அதிகரித்து மொத்தம் 1,60,983 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 26,575 பேர் குணமாகி இதுவரை 1,12,62,503 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,17,813 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 35,952 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,00,833 ஆகி உள்ளது நேற்று 111 பேர் உயிர் இழந்து மொத்தம் 53,795 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 20,444 பேர் குணமடைந்து மொத்தம் 22,83,037 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,62,685 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 1,989 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,11,898 ஆகி உள்ளது. இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,540 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,865 பேர் குணமடைந்து மொத்தம் 10,82,668 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,337 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,525 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,78,478 ஆகி உள்ளது இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,471 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,192 பேர் குணமடைந்து மொத்தம் 9,47,781 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,207 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 758 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,95,879 ஆகி உள்ளது. நேற்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,201 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 231 பேர் குணமடைந்து மொத்தம் 8,85,209 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,469 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,779 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,73,219 ஆகி உள்ளது இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,641 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,027 பேர் குணமடைந்து மொத்தம் 8,50,091 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 10,487 பேர் சிகிச்சையில் உள்ளனர்.