டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,33,594 ஆக உயர்ந்து 1,60,477 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,239 பேர் அதிகரித்து மொத்தம் 1,17,33,594 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 277 அதிகரித்து மொத்தம் 1,60,477 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 23,913 பேர் குணமாகி  இதுவரை 1,12,03,016 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 3,65,369 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 28,699 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,33,026 ஆகி உள்ளது  நேற்று 132 பேர் உயிர் இழந்து மொத்தம் 53,589 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,165 பேர் குணமடைந்து மொத்தம் 22,47,495 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,30,641 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 1,985 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,07,453 ஆகி உள்ளது.  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,518 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,172 பேர் குணமடைந்து மொத்தம் 10,78,743 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 23,880 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,1010 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,73,657 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,449 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 677 பேர் குணமடைந்து மொத்தம் 9,45,594 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,595 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 492 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,94,536 ஆகி உள்ளது.  நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,193 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 256 பேர் குணமடைந்து மொத்தம் 8,84,727 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,616 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,437 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,69,804 ஆகி உள்ளது  இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,618 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 902 பேர் குணமடைந்து மொத்தம் 8,48,041 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,145 பேர் சிகிச்சையில் உள்ளனர்.