டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,98,710 ஆக உயர்ந்து 1,59,790 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,815 பேர் அதிகரித்து மொத்தம் 1,15,98,710 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 196 அதிகரித்து மொத்தம் 1,59,790 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 22,970 பேர் குணமாகி  இதுவரை 1,11,28,119 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 3,06,093 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 27,126 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,49,147 ஆகி உள்ளது  நேற்று 92 பேர் உயிர் இழந்து மொத்தம் 53,300 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 13,588 பேர் குணமடைந்து மொத்தம் 22,03,553 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,91,006 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 2,078 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,02,354 ஆகி உள்ளது.  இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,483 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,211 பேர் குணமடைந்து மொத்தம் 10,72,554 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 25,008 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,798 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,68,487 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,432 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,030 பேர் குணமடைந்து மொத்தம் 9,43,208 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,828 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 380 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,93,366 ஆகி உள்ளது.  நேற்று இருவர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,189 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 204 பேர் குணமடைந்து மொத்தம் 8,84,094 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,083 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,243 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,65,693 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,590 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 634 பேர் குணமடைந்து மொத்தம் 8,45,812 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 7,291 பேர் சிகிச்சையில் உள்ளனர்.