டில்லி

ந்தியாவில் நேற்று 3,92,469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,92,459 பேர் அதிகரித்து மொத்தம் 1,95,49,656 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,984 அதிகரித்து மொத்தம் 2,15,523 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,08,522 பேர் குணமாகி  இதுவரை 1,59,81,772 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 33,43,910 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 63,282 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 46,65,754 ஆகி உள்ளது  நேற்று 802 பேர் உயிர் இழந்து மொத்தம் 67,985 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 61,326 பேர் குணமடைந்து மொத்தம் 39,30,302 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,63,758 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 35,636 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,06,820 ஆகி உள்ளது.  இதில் நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,357 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 15,493 பேர் குணமடைந்து மொத்தம் 12,77,294 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,23,827 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 40,990 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,64,132 ஆகி உள்ளது  இதில் நேற்று 271 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,794 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 18,341 பேர் குணமடைந்து மொத்தம் 11,43,250 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,05,068 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 30,180 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,82,504 ஆகி உள்ளது.  நேற்று 304 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,874 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 38,826 பேர் குணமடைந்து மொத்தம் 9,67,797 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,01,833 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 19,588 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,86,344 ஆகி உள்ளது  இதில் நேற்று 147 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,193 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 17,164 பேர் குணமடைந்து மொத்தம் 10,54,746 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,17,405 பேர் சிகிச்சையில் உள்ளனர்.