டில்லி
இந்தியாவில் நேற்று 3,55,680 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55,680 பேர் அதிகரித்து மொத்தம் 2,02,75,543 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,436 அதிகரித்து மொத்தம் 2,22,383 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 3,18,761 பேர் குணமாகி இதுவரை 1,66,00,703 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 34,43,687 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 48,621 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 47,71,022 ஆகி உள்ளது நேற்று 567 பேர் உயிர் இழந்து மொத்தம் 70,851 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 59,500 பேர் குணமடைந்து மொத்தம் 40,41,158 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,56,870 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 26,011 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,64,790 ஆகி உள்ளது. இதில் நேற்று 45 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,451 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 19,519 பேர் குணமடைந்து மொத்தம் 13,13,109 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,45,883 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 44,438 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,46,303 ஆகி உள்ளது இதில் நேற்று 239 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,250 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 20,901 பேர் குணமடைந்து மொத்தம் 11,85,299 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,44,734 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 29,052 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,42,413 ஆகி உள்ளது. நேற்று 285 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,447 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 38,687 பேர் குணமடைந்து மொத்தம் 10,43,134 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,85,832 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 20,952 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,28,064 ஆகி உள்ளது இதில் நேற்று 122 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,468 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 18,016 பேர் குணமடைந்து மொத்தம் 10,90,338 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,23,258 பேர் சிகிச்சையில் உள்ளனர்.