டில்லி

ந்தியாவில் நேற்று 3,29,379 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,29,379 பேர் அதிகரித்து மொத்தம் 2,29,91,927 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,877 அதிகரித்து மொத்தம் 2,50,025 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,55,748 பேர் குணமாகி  இதுவரை 1,90,21,207 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 37,10,896 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 37,236 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 51,38,973 ஆகி உள்ளது  நேற்று 549 பேர் உயிர் இழந்து மொத்தம் 76,398 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 61,607 பேர் குணமடைந்து மொத்தம் 44,69,425 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 5,90,818 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 39,305 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,73,683 ஆகி உள்ளது  இதில் நேற்று 596 பேர் உயிர் இழந்து மொத்தம் 19,572 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 32,188 பேர் குணமடைந்து மொத்தம் 13,83,285 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,71,006 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 21,277 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,30,116 ஆகி உள்ளது.  இதில் நேற்று 65 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,880 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 31,209 பேர் குணமடைந்து மொத்தம் 15,04,160 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,19,725 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 21,277 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,24,767 ஆகி உள்ளது.  நேற்று 278 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 15,742 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 31,209 பேர் குணமடைந்து மொத்தம் 15,04,160 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,26,271 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 28,978 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,09,237 ஆகி உள்ளது  இதில் நேற்று 252 பேர் உயிர் இழந்து மொத்தம் 15,742 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 20,904 பேர் குணமடைந்து மொத்தம் 12,40,968 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,52,889 பேர் சிகிச்சையில் உள்ளனர்.