டில்லி

ந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,74,944 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,74,944 பேர் அதிகரித்து மொத்தம் 1,50,57,767 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,620 அதிகரித்து மொத்தம் 1,78,793 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,43,714 பேர் குணமாகி  இதுவரை 1,29,48,848 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 19,23,877 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 68,631 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 38,39,338 ஆகி உள்ளது  நேற்று 503 பேர் உயிர் இழந்து மொத்தம் 60,473 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 45,654 பேர் குணமடைந்து மொத்தம் 31,06,828 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,70,388 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 18,257 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 12,39,425 ஆகி உள்ளது.  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,930 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,565 பேர் குணமடைந்து மொத்தம் 11,40,486 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 93,683 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 19,067 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,61,065 ஆகி உள்ளது  இதில் நேற்று 81 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,351 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,603 பேர் குணமடைந்து மொத்தம் 10,14,152 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,33,543 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 10,723 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,91,451 ஆகி உள்ளது  இதில் நேற்று 42 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,113 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,925 பேர் குணமடைந்து மொத்தம் 9,07,947 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 70,391 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 6,585 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,53,560 ஆகி உள்ளது.  நேற்று 22 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,410 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,343 பேர் குணமடைந்து மொத்தம் 9,09,941 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 44,686 பேர் சிகிச்சையில் உள்ளனர்.