டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,23,544 ஆக உயர்ந்து 1,46,778 பேர் மரணம் அடைந்து 96,92,061 பேர் குணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 24,236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,01,23,544 ஆகி உள்ளது.  நேற்று 302 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,46,778 ஆகி உள்ளது.  நேற்று 29,364 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 96,92,061 ஆகி உள்ளது.  தற்போது 2,81,959 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,913 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,06,371 ஆகி உள்ளது  நேற்று 93 பேர் உயிர் இழந்து மொத்தம் 48,969 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,620 பேர் குணமடைந்து மொத்தம் 18,01,700 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 54,573 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 958 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,12,340 ஆகி உள்ளது  இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,038 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,206 பேர் குணமடைந்து மொத்தம் 8,86,547 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,736 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 379 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,79,718 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,085 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 490 பேர் குணமடைந்து மொத்தம் 8,68,769 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,864 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,066 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,10,080 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,024 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,131 பேர் குணமடைந்து மொத்தம் 7,88,742 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 9,314 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 6,169 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,21,511 ஆகி உள்ளது  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,893 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,808 பேர் குணமடைந்து மொத்தம் 6,55,644 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 62,803 பேர் சிகிச்சையில் உள்ளனர்.