டில்லி

நேற்று இந்தியாவில் 20,70,508 மாதிரிகள் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.  நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,79,535 பேர் அதிகரித்து மொத்தம் 2,75,47,705 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,556 அதிகரித்து மொத்தம் 3,18,821 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 2,95,085 பேர் குணமாகி  இதுவரை 2,48,90,326 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 23,27,541 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுவரை கொரோனாவுக்கு சரியான சிகிச்சை பரிந்துரைக்கப்படாத நிலையில் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் மிகவும் அவசியமானதாகும்.  எனவே இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இதையொட்டி கொரோனா  பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் நேற்று 20,70,508 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.   இதுவரை 33,90,39,861 மாதிரிகள் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் நேற்று 1,74,145 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 2,69,88,201 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.