டில்லி

ந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,99,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,569 பேர் அதிகரித்து மொத்தம் 1,40,70,890 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,037 அதிகரித்து மொத்தம் 1,73,152 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 93,418 பேர் குணமாகி  இதுவரை 1,24,326,146 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 14,65,877 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 68,952 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 35,78,160 ஆகி உள்ளது  நேற்று 278 பேர் உயிர் இழந்து மொத்தம் 58,804 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 39,624 பேர் குணமடைந்து மொத்தம் 29,05,721 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,12,070 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 8,778 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 11,89,176 ஆகி உள்ளது.  இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,837 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,642 பேர் குணமடைந்து மொத்தம் 11,25,775 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 58,242 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 11,265 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,94,912 ஆகி உள்ளது  இதில் நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,046 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,364 பேர் குணமடைந்து மொத்தம் 9,96,367 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 85,480 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 7,819 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,54,948 ஆகி உள்ளது  இதில் நேற்று 18 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,945 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,289 பேர் குணமடைந்து மொத்தம் 8,84,199 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 49,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 4,228 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,32,892 ஆகி உள்ளது.  நேற்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,321 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,483 பேர் குணமடைந்து மொத்தம் 8,99,721 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 28,850 பேர் சிகிச்சையில் உள்ளனர்.