டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,63,038 ஆக உயர்ந்து 1,56,861 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,562 பேர் அதிகரித்து மொத்தம் 1,10,63,038 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 119 அதிகரித்து மொத்தம் 1,56,861 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 12,849 பேர் குணமாகி  இதுவரை 1,07,48,759 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,52,849 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 8,702 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 21,29,821 ஆகி உள்ளது  நேற்று 56 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,993 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,744 பேர் குணமடைந்து மொத்தம் 20,12,367 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 64,260 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 3,377 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,48,687 ஆகி உள்ளது.  இதில் நேற்று 14 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,151 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,652 பேர் குணமடைந்து மொத்தம் 9,92,3722 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 51,876 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 463 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,49,636 ஆகி உள்ளது  இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,316 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 947 பேர் குணமடைந்து மொத்தம் 9,31,725 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,576 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 82 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,89,585 ஆகி உள்ளது.   இதுவரை மொத்தம் 7,168 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 74 பேர் குணமடைந்து மொத்தம் 8,81,806 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 611 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 467 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,50,096 ஆகி உள்ளது  இதில் நேற்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,483 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 471 பேர் குணமடைந்து மொத்தம் 8,33,560 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,053 பேர் சிகிச்சையில் உள்ளனர்.