டில்லி

ந்தியாவில் நேற்று 1,53,347 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,53,347 பேர் அதிகரித்து மொத்தம் 2,80,46,957 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3129 அதிகரித்து மொத்தம் 3,29,127 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 2,37,568 பேர் குணமாகி  இதுவரை 2,56,84,529 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 20,22,103 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 18,600 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 57,31,815 ஆகி உள்ளது  நேற்று 814 பேர் உயிர் இழந்து மொத்தம் 94,844 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 22,532 பேர் குணமடைந்து மொத்தம் 53,62,370 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,71,801 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 20,378 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,87,827 ஆகி உள்ளது  இதில் நேற்று 381 பேர் உயிர் இழந்து மொத்தம் 28,679 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 28,053 பேர் குணமடைந்து மொத்தம் 22,17,117 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,42,010 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 19,894 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,14,280 ஆகி உள்ளது.  இதில் நேற்று 186 பேர் உயிர் இழந்து மொத்தம் 8,642 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 20,013 பேர் குணமடைந்து மொத்தம் 22,81,518 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,23,725 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 28,864 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,68,580 ஆகி உள்ளது  இதில் நேற்று 493 பேர் உயிர் இழந்து மொத்தம் 23,764 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 32,982 பேர் குணமடைந்து மொத்தம் 17,39,280 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 3,15,546 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,864 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,90,016 ஆகி உள்ளது.  நேற்று 136 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 20,346 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,902 பேர் குணமடைந்து மொத்தம் 16,28,458 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 41,214 பேர் சிகிச்சையில் உள்ளனர்.