டில்லி

நேற்று இந்தியாவில் 15,19,486 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தற்போது கொரோனா பரவல் இரண்டாம் அலையில் நாடெங்கும் பாதிப்பு கடுமையாகி வருகிறது.   இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கும் மேலாகி உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.  இதையொட்டி கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,56,828 பேர் அதிகரித்து மொத்தம் 1,53,14,714 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,757 அதிகரித்து மொத்தம் 1,80,550 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 1,54,234 பேர் குணமாகி இதுவரை 1,31,03,220 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 20,24,629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று இந்தியாவில் 15,19,846 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  நேற்று வரை இந்தியாவில் 26,94,14,035 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.   இந்த செய்தியை இந்திய மருத்துவ ஆய்வுக் குழு வெளியிட்டுள்ளது.