டில்லி
இந்தியாவில் 14,28,672 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,67,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,67,059 பேர் அதிகரித்து மொத்தம் 4,14,69,499 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,192 அதிகரித்து மொத்தம் 4,96,242 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,54,076 பேர் குணமடைந்து இதுவரை 3,92,30,198 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 17,43,059 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று இந்தியாவில் 61,45,767 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு மொத்த எண்ணிக்கை 166,66,68,204 ஆகி உள்ளது.
இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன. தற்போது மூன்றாம் அலை கொரோனா பரவுவதால் கொரோனா பரிசோதனைகள் அவசியம் ஆகி உள்ளன.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14,28,672 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 73,06,97,193 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று 1,30,457 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 6,17,54,673 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.