டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,34,026 ஆக உயர்ந்து 1,54,184 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 13,053 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,07,34,026 ஆகி உள்ளது. நேற்று 137 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,54,184 ஆகி உள்ளது. நேற்று 14,872 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,08,034 ஆகி உள்ளது. தற்போது 1,67,316 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 2,771 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,21,184 ஆகி உள்ளது நேற்று 56 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,000 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,613 பேர் குணமடைந்து மொத்தம் 19,25,800 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 43,147 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 468 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,38,401 ஆகி உள்ளது இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,211 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 607 பேர் குணமடைந்து மொத்தம் 9,20,110 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,061 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 6,268 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,17,631 ஆகி உள்ளது. இதில் நேற்று 22 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,705 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,398 பேர் குணமடைந்து மொத்தம் 8,41,444 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 72,242 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 125 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,87,591 ஆகி உள்ளது இதுவரை மொத்தம் 7,152 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 175 பேர் குணமடைந்து மொத்தம் 8,79,131 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,308 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 509 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,37,327 ஆகி உள்ளது இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,345 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 531 பேர் குணமடைந்து மொத்தம் 8,20,381 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,601 பேர் சிகிச்சையில் உள்ளனர்.