டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,09,49,546 ஆக உயர்ந்து 1,56,038 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 12,418 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,09,49,546 ஆகி உள்ளது.  நேற்று 89 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,56,038 ஆகி உள்ளது.  நேற்று 11,750 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,06,54,706 ஆகி உள்ளது.  தற்போது 1,34,244 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 4,787 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,76,093 ஆகி உள்ளது  நேற்று 40 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,831 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,853 பேர் குணமடைந்து மொத்தம் 19,85,263 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 38,013 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 4,832 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 10,16,849 ஆகி உள்ளது.  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,033 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,832 பேர் குணமடைந்து மொத்தம் 9,51,742 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 60,804 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 378 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,46,454 ஆகி உள்ளது  இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,276 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 537 பேர் குணமடைந்து மொத்தம் 9,28,481 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,698 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 51 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,89,010 ஆகி உள்ளது.  நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,165 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 57 பேர் குணமடைந்து மொத்தம் 8,81,238 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 607 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 454 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,46,480 ஆகி உள்ளது  இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,438 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 462 பேர் குணமடைந்து மொத்தம் 8,29,850 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,192 பேர் சிகிச்சையில் உள்ளனர்.