டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,07,78,206 ஆக உயர்ந்து 1,54,635 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 11,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,07,78,206 ஆகி உள்ளது. நேற்று 113 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,54,635 ஆகி உள்ளது. நேற்று 14,256 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,61,706 ஆகி உள்ளது. தற்போது 1,57,355 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 1,927 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,30,274 ஆகி உள்ளது நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 51,139 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 4,011 பேர் குணமடைந்து மொத்தம் 19,36,305 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 41,586 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 395 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,40,170 ஆகி உள்ளது இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,223 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 412 பேர் குணமடைந்து மொத்தம் 9,20,004 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,924 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 5,716 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,38,354 ஆகி உள்ளது. இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,777 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,747 பேர் குணமடைந்து மொத்தம் 8,65,168 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 69,169 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 104 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,88,004 ஆகி உள்ளது நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,156 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 147 பேர் குணமடைந்து மொத்தம் 8,79,651 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,197 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 510 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,39,352 ஆகி உள்ளது இதில் நேற்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,367 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 521 பேர் குணமடைந்து மொத்தம் 8,22,468 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,517 பேர் சிகிச்சையில் உள்ளனர்.