டில்லி
நேற்று ஒரே நாளில் 11,42,311 கொரோனா சோதனைகள் நடந்துள்ளன.
உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்த பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை.
பல உலக நாடுகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
பாதிக்கப்பட்டோருக்கான சரியான் மருந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே கண்டறிதல், பரிசோதனை, கண்காணிப்பு ஆகிய முறைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
உலகெங்கும் கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளன.
அவ்வகையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,42,131 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை இந்தியாவில் 7,89,92,534 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை இந்திய மருத்துவ ஆய்வுக் குழு வெளியிட்டுள்ளது.