டில்லி
நேற்று இந்தியாவில் 11,11,698 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.
நாடெங்கும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை 95.33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1.38 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்
கொரோனா தடுப்பூசி எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகளும் அதிகாரப்பூர்வமாக எதுவும் கண்டறியப்படவில்லை.
இதையொட்டி பரிசோதனை, தனிமைப்படுத்தல் ஆகிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11,11,698 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 14,35,57,647 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.