டில்லி

ந்தியாவில் நேற்று 46,498 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,02,78,963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,498 அதிகரித்து மொத்தம் 3,02,78,963 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 978 அதிகரித்து மொத்தம் 3,96,761 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 58,540 பேர் குணமாகி  இதுவரை 2,93,02,260 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 5,68,048 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 9,974 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 60,36,821 ஆகி உள்ளது  நேற்று 405 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,21,286 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,562 பேர் குணமடைந்து மொத்தம் 57,90,113 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,22,252 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 10,905 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,34,630 ஆகி உள்ளது.  இதில் நேற்று 62 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,880 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,351 பேர் குணமடைந்து மொத்தம் 27,75,967 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 99,590 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,604 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,34,630 ஆகி உள்ளது  இதில் நேற்று 89 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,743 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 7,699 பேர் குணமடைந்து மொத்தம் 26,98,822 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,01,042 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,127 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,65,874 ஆகி உள்ளது  இதில் நேற்று 91 பேர் உயிர் இழந்து மொத்தம் 32,290 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,159 பேர் குணமடைந்து மொத்தம் 23,90,783 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 42,801 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 4,250 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,79,872 ஆகி உள்ளது.  நேற்று 33 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,599 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,570 பேர் குணமடைந்து மொத்தம் 18,22,500 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 44,773 பேர் சிகிச்சையில் உள்ளனர்.