இந்தியா : நேற்று 9.58 லட்சம் கொரோனா சோதனை

Must read

டில்லி

நேற்று ஒரே நாளில் 9,58,125 கொரோனா சோதனைகள் இந்தியாவில் நடந்துள்ளன.

இதுவரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.  மேலும் இதுவரை உலகெங்கும் கொரோனாவுக்கான சரியான சிகிச்சை முறை கண்டறியப்படவில்லை.  தற்போது கண்டறிதல், சோதனை, மற்றும் தனிமைப்படுத்தல் எனச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இந்தியாவில் இதுவரை 17,48,99,783 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன.  இதில் நேற்று ஒரே நாளில் 9,58,125 சோதனைகள் நடந்துள்ளன.   இதில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 1,40,17,008 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1,03,24,631 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 1,49,471 பேர் உயிரிழந்துள்ளனர்.   இதுவரை 99,26,527 பேர் குணம் அடைந்து தற்போது 2,45, 754 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

More articles

Latest article