ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படம் முதல் பாகம் ரூ.685 கோடியும், இரண்டாம் பாகம் ரூ.1,810 கோடியும் உலகம் முழுவதும் வசூலித்து சாதனை புரிந்தன.
இந்நிலையில் இப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை ரஷ்ய தொலைக்காட்சி சேனல் ஒன்று கைப்பற்றியிருந்தது. அதற்காக ‘பாகுபலி 2’ திரைப்படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டது.
இதை இந்தியாவுக்கான ரஷ்யத் தூதரகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
https://twitter.com/RusEmbIndia/status/1265932328670564352
”ரஷ்யாவில் இந்தியப் படங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. ‘பாகுபலி 2’ திரைப்படம் ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரஷ்யத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது” என்று பதிவிட்டுள்ளது.