மும்பை
யெஸ் வங்கி தலைவர் ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர் லண்டனுக்குச் செல்ல இருந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்
நிதி நிலை நெருக்கடி காரணமாக யெஸ் வங்கி திவாலாகும் நிலைக்கு வந்துள்ளது. இந்த வங்கியின் பொறுப்பை ரிசர்வ் வங்கி ஏற்றுக கொண்டு பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அமலாக்கத்துறை யெஸ் வங்கித் தலைவர் ராணா கபூர் இல்லம் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்தது. தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டு அவரிடம் தொடர்ந்து விசார்னை நடைபெற்று வருகிறது.
அமலாக்கத் துறை ராணா கபூர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு லுக் அவுட் நோட்டிஸ் அளித்துள்ளது. அதன்படி ராணா கபூர், அவர் மனைவி பிந்து கபூர், மகள்கள் ராக்கி கபூர் டண்டன், ராதா கபூர் மற்றும் ரோஷினி கபூர் ஆகியோருக்கு இந்தியாவை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று ராணா கபூரின் மகள் ரோஷினி கபூர் இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டனுக்குச் செல்ல மும்பை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் லண்டனுக்கு செல்ல தடுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப் பட்டுள்ளார்.