பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது மகனுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்கும் வகையில் அவர் இந்த முடிவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து பணியாற்றி வருகிறது. இப்போதே பல்வேறு இலவசம் தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகிறது,.

இந்த நிலையில், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். ஆனால், தீவிர அரசியலில் ஈடுபடுவேன். எனது கடைசி மூச்சு வரை பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவேன்” என்று எடியூரப்பா அறிவித்து உள்ளார். இதையடுத்து, அவர் தேர்தல் களத்தில் தனது மகனான விஜயேந்திராவை களமிறக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

கர்நாடகாவில் நான்கு முறை முதல்வராக இருந்த எடியூரப்பா. இவர் தற்போது நடைபெற்று வரும்  சட்டமன்றத்தில் பேசும்போது,  ” கர்நாடக மக்களின் சேவையில் நான் ஒவ்வொரு நாளையும் செலவிடுகிறேன்.  ஜனசங்கம் மற்றும் பாஜகவின் செயலாளராக இருந்த காலத்தில் இருந்தே நான் மக்ளுக்கு சேவை செய்து அடிமட்ட மக்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க முயற்சித்தேன். வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி போன்ற பாஜக தலைவர்களுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்” என்று கூறினார்.

தற்போத எதிர்கட்சி தலைவராக உள்ள சித்தராமையா மிகச் சிறப்பாக செயல்படுகிறார் என்று புகழாரம் சூட்டியவர், இந்த ஆண்டு நடைபெற உள்ள கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். ஆனால், தீவிர அரசியலில் ஈடுபடுவேன். எனது கடைசி மூச்சு வரை பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவேன்” என்றார்.

கர்நாடகா மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இதுவரை பாஜக அறிவிக்கவில்லை. ஆனால், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜேந்திரா தான் என்ற குரல்கள் பாஜகவிற்குள் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தான், தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக எடியூரப்பா  அறிவித்துள்ளார். இதையடுத்து, அவர் தனது மகன் விஜயேந்திராவை,  தான்  1983ல்  அறிமுகமான ஷிகாரிபுரா ஷிகாரிபுரா தொகுதியில் விஜயேந்திரபாவை களமிறக்க முடிவு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.