சென்னை

நேற்று தமிழகத்தில் 18 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம்  அதிகரித்து இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. எனவே தமிழகத்தில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.

தற்போது மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் இனிவரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று தமிழகத்தில் 18 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி உள்ளன

அதாவது

திருத்தணி – 108.5, மீனம்பாக்கம் – 107, வேலூர் – 107, மதுரை விமான நிலையம் – 104, நுங்கம்பாக்கம் – 104, பரங்கிப்பேட்டை – 104, மதுரை நகரம் – 104, புதுச்சேரி – 104, ஈரோடு – 104, நாகப்பட்டினம் – 103, கடலூர் – 103, திருச்சி – 102, தஞ்சாவூர் – 102, தொண்டி – 101, திருப்பத்தூர் – 101, காரைக்கால் – 101, கரூர் பரமத்தி – 100, தூத்துக்குடி – 100 டிகிரி

வெப்பம் பதிவாகியுள்ளது.

நேற்று சுற்றுலா தளங்களில்

குன்னூர் – 76.64, கொடைக்கானல் – 71.6, ஊட்டி – 72, வால்பாறை – 78 டிகிரி

வெப்பம் பதிவாகியுள்ளது.