டில்லி:
பிரதமர் மோடி துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறார் என்ற பாஜக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா கடுமயாக விமர்சனம் செய்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பாஜக மூத்த உறுப்பினருமான யஷ்வந்த் சின்ஹா, முகமது பின் துக்ளக் கையாண்ட ஆட்சியையை தற்போதைய பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, வரித்துறை அதிகாரிகள் கெடுபிடியுடன் நடந்து கொள்வதாக பாரதிய ஜனதா கட்சியினர் கடுமையாக குற்றம் சாட்டினர்.
ஆனால், தற்போது பணமதிப்பிழப்பு அறிவிப்பு நடவடிக்கை மூலம் வரி பயங்கர வாதத்துக்கு வித்திட்டு இருப்பது பா.ஜனதா அரசு தான்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்ட எந்த நோக்கத்தையும் நிறைவேற்றவில்லை. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் 18 லட்சம் வழக்குகளை வருமான வரித்துறை பதிவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். இத்தனை வழக்குகளை விசாரிப்பதற்கு வருமான வரித்துறையில் வசதிகள் உள்ளனவா? வழக்கு விசாரணை முடிய இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? என்று கேள்வி எழுப்பிய யஷ்வந்த் சின்ஹா,
16-ம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட ஒருவரும் (முகம்மது பின் துக்ளக்) தனது ஆட்சியில் புழக்கத்தில் இருந்த பணத்தை மதிப்பிழக்க செய்தார். 500 ஆண்டுகளுக்கு முன் அந்த அரசர் செய்த அதே தவறை தற்போது ஆட்சி செய்யும் ஒருவர் (பிரதமர்) மீண்டும் செய்து இருக்கிறார் என்று கூறினார்.