தமிழ், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார் யாமி கவுதம்.

2019-ம் ஆண்டு ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான வெளியான ‘யூரி – தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஆதித்யா தர் – யாமி கவுதம் இருவருக்கும் காதல் உருவானது.

அதனைத் தொடர்ந்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் ஜூன் 4 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

ஆதித்யா தர் – யாமி கவுதம் இருவரும் திருமணம் செய்து கொண்டது குறித்து தங்களுடைய ட்விட்டர் பதிவில், “எங்கள் குடும்பத்தினரின் ஆசீர்வாதத்தோடு, நெருங்கிய நபர்கள் மட்டும் பங்குகொண்ட விழாவில் எங்கள் திருமணம் நடந்து முடிந்தது. அன்பும், நட்பும் சேர இந்தப் பயணத்தை நாங்கள் தொடங்கும் இந்த வேளையில் உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும், நல்வாழ்த்துகளையும் கோருகிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று தங்களுடைய திருமணப் புகைப்படத்தை வாழ்நாள் நினைவலைகள் என கூறி யாமி கவுதம் வெளியிட்டுள்ளார்.

ஆதித்யா தர் – யாமி கவுதம் இருவருக்கும் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.