FEMA எனப்படும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை (Foreign Exchange Management Act) மீறியதாக அமலாக்கத்துறையினர் பாலிவுட் நடிகை யாமி கவுதமுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
நடிகை யாமி கவுதமின் வங்கிக் கணக்கில் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாகவும், அவருடைய கணக்கில் 1.5 கோடி ரூபாய் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதாகவும் அமலாக்கத்துறை கூறியிருக்கிறது. இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அடுத்த வாரம் அவர் அமலாக்கத்துறையின் அலுவலகத்திற்கு வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே ஒரு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராஜவில்லை எனவும் தெரியவந்திருக்கிறது. எனவே இந்த முறை அவர் ஆஜராகவில்லை எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
தமிழில் பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் 2013ம் ஆண்டு வெளிவந்த கவுரவம் மற்றும் 2016ல் நடிகர் ஜெய்யுடன் ஜோடியாக தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்திலும் நடித்திருக்கிறார் யாமி கவுதம்.