சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை நேர்மையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள விசிக தலைவர் திருமாவளவன் ‘யார் அந்த சார்?’ என்கிற சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில்  இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக கூட்டணி கட்சியான  விசிக தலைவர் திருமாவளவன், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பான கேள்விகளுக்கு  பதில் அளித்தார். அப்போது,   “தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும்கூட, அந்தக் குற்றச்செயல் அதிர்ச்சியையும் வேதனையும் உருவாக்கியுள்ளது. கல்வி வளாக விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளுக்குத் தேவையான பாதுகாப்பை அளிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி, ஒரு சிலர் குற்றத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்கிற சந்தேகம் வலுத்துள்ளது. ஆகவே தமிழக அரசு குறிப்பாக காவல்துறை நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக பிணை வழங்கக் கூடாது.

விசாரணையை விரைவில் முடித்து குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். ‘யார் அந்த சார்?’ என்கிற சந்தேகத்தில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும்.

இந்த விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என்று பாஜக, அதிமுக போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், திருமாவளவனும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி யிருப்பது கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சி திமுக ஆட்சியின் அவலங்களை விமர்சித்து வரும் நிலையில், தற்போது திருமாவும் அரசுக்கு எதிராக கூறியிருப்பது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.   சம்பவத்தன்று இரவு அந்த மாணவி  தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததை மறைந்திருந்து வீடியோவாக எடுத்த ஞானசேகரன் என்பவர், அதை வீடியோவை காட்டி,  தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையில் புகார் அளித்தார்.  இதுதொடர்பாக அவர் காவல்துறையில் கொடுத்த வாக்குமூலத்தில், தன்னை பாலியல் வன்புணர்வு செய்த நபர், வீடியோவை காட்டி மிரட்டியதாகவும்,   பல்கலைக்கழக டீனிடம் சொல்லி டிசி வாங்கிக் கொடுத்து விடுவதாக கூறியதுடன்,   வீடியோவை மாணவியின் தந்தைக்கும் அனுப்புவதாக தெரிவித்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  மேலும் குறிப்பிட்ட நபர், தன்னை  மிரட்டும் போது யாரோ ஒருவரிடம் போனில் பேசியதாகவும்,  புகாரில்  அந்த மாணவி  தெரிவித்திருந்தார். அந்த மாணவி யாரோ ஒரு சாருடன் இரவு தங்க வேண்டும் என்றும்  மிரட்டியதாக தெரிகிறது. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட புகாரின் பேரில்  அந்த பகுதியில் பிரியாணி கடை போட்டுள்ள திமுக பிரமுகரான ஞானசேகரன் என்ற 38 வயது நபர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவர்மீது ஏற்கனவே ஆள்கடத்தல் உள்பட பல வழக்குகள் உள்ளது. பதிவேறு குற்றவாளியான ஞானசேகர் ஆட்சியாளர்கள் ஆதரவுடன் நடமாடி வந்ததாக கூறப்படுகிறது.  இதற்கிடையில், மாணவி கொடுத்த புகார் தொடர்பான  முதல் தகவல் அறிக்கை லீக்கானது, மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்ஆணையர், அருண் குற்றவாளிகளுக்கு சாதகமாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியதும் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளத. இதனால், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பூதாகாரமாகி உள்ளன.

பாஜக மகளிர் அணியின் மதுரை டூ சென்னை ‘நீதி கேட்பு பேரணி’க்கு காவல்துறை அனுமதி மறுப்பு! அண்ணாமலை அழைப்பு…