சென்னை: அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் வன்கொடுமைத  வழக்​கில் கைது செய்யப்பட்டு,  சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்​டனை கைதி​யான ‘யார் அந்த சார்’ ஞான​சேகரன் உடல்​நலக் குறைவு காரண​மாக சென்னை  ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் மீண்​டும் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனையில் உள்ள திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு ஸ்டாலின் தான் பொறுப்பு என்று அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்​கலைக்​கழக மாணவி பாலியல் துன்​புறுத்​தல் வழக்​கில், திமுக உறுப்பினரான சென்னை கோட்​டூர்​புரத்​தைச் சேர்ந்த பிரி​யாணி கடை உரிமை​யாளர் ஞான​சேகரனை (38) கோட்​டூர்​புரம் அனைத்து மகளிர் போலீ​ஸார் 2024 டிசம்​பரில் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். எஇந்த வழக்​கில் ஞான​சேகரனுக்கு ஆயுள் தண்​டனை (30 ஆண்டு சிறை) விதித்து சென்னை மகளிர் நீதி​மன்​றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ம் தேதி தீர்ப்​பளித்​தது.

இதையடுத்து அவர் புழல் சிறை​யில் தண்​டனை கைதி​கள் பிரி​வில் அடைக்​கப்​பட்​டார். இந்​த நிலை​யில் அவருக்கு நேற்று அதி​காலை 1.30 மணி​யள​வில் திடீரென உடல் நலக்​குறைவு (வலிப்​பு) ஏற்​பட்​டதை அடுத்​து, சிறைக் காவலர்​கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக சேர்த்​தனர். தற்​போது ஞான​சேகரன் அவசர சிகிச்​சைப் பிரிவு வார்​டில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வரு​கிறார்.

ஏற்​கெனவே 4 முறை ஞான​சேகரனுக்கு இது​போன்று வலிப்பு ஏற்​பட்டு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்​றுள்ள நிலை​யில், தற்​போது 5-வது முறை​யாக வலிப்பு நோய் காரண​மாக மீண்​டும் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் தனது  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரன் ஏப்ரல் 20ந்தேதி அதிகாலை சிறையில் இருந்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உள் நோயாளியாக அழைத்து செல்லப்பட்டு அனுமதிக்கபட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஏற்கனவே யார் அந்த SIR என்ற உண்மை தெரியவிடாமல் அவசர கதியில் முடிக்கப்பட்ட இந்த வழக்கை அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் விசாரித்து யார் அந்த சார் என்பது கண்டறியப்படும் என புரட்சித் தமிழர் எடப்பாடியார் அறிவித்திருந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதை உணர்ந்துவிட்ட திமுக அரசு, பயத்தில், பதற்றத்தில், காபந்து அரசாக இருக்கும் போதே இந்த வழக்கின் போக்கை ஒட்டுமொத்தமாக ஆதாரமின்றி முடிந்துவிட வேண்டும் என நினைக்கிறதா? என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே நிலவியுள்ளது.

மருத்துவமனையில் உள்ள திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு ஸ்டாலினும், ஞானசேகரன் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட திமுக அமைச்சரும் தான் பொறுப்பு!

ஏதாவது சித்துவேலை செய்யலாம் என்று திமுக நினைத்தால், அதற்கான பின்விளைவுகள் மே-4 ஆம் தேதிக்கு பிறகு கடுமையாக இருக்கும் என்பதை எச்சரிக்கிறோம்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]