சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் புகழ்பெற்ற பத்ம சோஷத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் கணக்குபதிவியல் மற்றும் வணிக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிராக பாலியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சமூகவலைதளங்களில் பிரபலங்கள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதுபற்றி ஊடகங்களிடம் பேசியுள்ள ஒய்.ஜி.மகேந்திரன், “பிஸ்பிபி பள்ளியை நானோ என் மகள் மதுவந்தியோ நடத்தவில்லை. நான் அந்த பள்ளியில் ஒரு டிரஸ்டீ தான். என் தம்பியும் தம்பி மனைவியும் தான் வழிநடத்துகிறார்கள்.
இப்படி ஒரு புகாரை கேள்விப்பட்டதுமே இது சம்மந்தமாக விசாரித்து நடவடிக்கையை முடுக்க வேண்டும் என பள்ளிக்கு ஒரு மெயில் அனுப்பியுள்ளேன். மேலும் இந்த புகார்களினால் என் தாயுடைய பெயர் கெட்டுப் போய்விடக் கூடாது. ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இதற்கு முன்பாக எழவில்லை என பள்ளித்தரப்பில் இருந்து பதில் வந்தது.” என குறிப்பிட்டுள்ளார்.