விண்வெளியில் பறந்து , பூமியை படம் பிடித்து திரும்பிய ரெட்மி நோட்7 பைல் தொடர்பான வீடியோ வைரலாகி வரகிறது.
மொபைல், டிவி போன்ற வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து வழங்கி வரும் சியோமி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. நாளுக்கு நாள் புதிய தொழில்நுட்பத்துடன் வெளியாகும் சியோமி நிறுவனத்தின் ரெட்மி மொபைல்கள் இந்தியர்களிடையே பெரும் சந்தையை பிடித்துள்ளது.
நவீன தொழில்நுடங்களுடன் குறைந்த விலையில் விற்பனையாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்ககள் இந்திய சந்தையில் முதலிடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சமீபத்தில் வெளியான சியோமி தயாரிப்பின் ரெட்மி நோட் 7 போனின் காமிராவின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், ரெட்மி நோட் 7 மொபைல் போன் சோதனைக்காக விண்வெளிக்கு அனுப்பட்டது.
பலூன் மூலம் விண்ணுக்கு அனுப்பபட்ட இந்த ஸ்மார்ட்போன் விண்வெளியில் சென்றது அங்கு மிதந்தபடி அரிய புகைப்படங்களையும் எடுத்து தள்ளியுள்ளது. இதில் 31,000 மீட்டர் உயரத்தில் சில அற்புதமான புகைப்படங்களை எடுத்துள்ளது இந்தநோட் 7. விண்ணில் நிலவிய மைனஸ் 58 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையையும், 1KPa அளவுக்கு இருந்த வளிமண்டல அழுத்தத்தையும் தாக்குப்பிடித்திருக்கிறது.
சில போட்டோக்களை எடுத்த பின்னர், எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக பூமிக்குத் திரும்பிவந்திருக்கிறது. இதுகுறித்து வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது..
விண்ணில் பறக்கும் ரெட்மி நோட்7 வீடியோ…