வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு…. மீண்டும் அனைவரும் கொரோனா பரிசோதானை செய்ய திட்டம்…

Must read

ஹாங்காங்:

சீனாவின் வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸை அகற்றும் நோக்கில் 76 நாள் கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும், புதிதாக சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரத்தின் இறுதி நாட்களில், நகரத்தில் 6 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிய வந்துள்ளது. 35 நாட்களுக்கு பின்னர் பதிவான கொரோனா பாதிப்புகள் இதுவாகும்.

இதுகுறித்து ஆய்வு செய்ததில், புதிய கொரோனா பாதிப்புகள் எந்த வெளிநாட்டில் இருந்தும் சீனாவுக்கு வரவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் அந்த ஆய்வில், கொரோனா வைரஸ் முதல் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் சீனாவின் வுஹானில் நகரில் இன்னும் கொரோனா தொற்று முழுமையாக அகற்றப்படமால் இருப்பது சீனா அரசுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் கட்டுபடுத்தப்பட்ட நிலையில், புதிய கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளதற்கு பதிலளிக்கும் வகையில், வுஹானில் வசிக்கும் பொது மக்கள் அனைவருக்கும், அடுத்த 10 நாட்கள் நியூக்ளிக் அமில சோதனை மேற்கொள்ள உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நியூக்ளிக் அமில சோதனை என்பது கொரோனா வைரஸின் மரபணுக் குறியீட்டைக் கண்டறிவதற்கான சோதனையாகும். கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் மற்ற சோதனைகளை விட பயனுள்ள சோதனையாக நியூக்ளிக் அமில சோதனை இருக்கும்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த சோதனை கால கட்டத்தை “பத்து நாள் போர்”  (ten-day battle) என்று விவரிக்கப்பட்டுள்ளது.  இதில் 11 மில்லியன் மக்கள் வரை சோதனைக்கு  உட்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

உலகின் முதல் முதலில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நகரம் சீனாவின் வுஹான் தான். மேலும், இந்த நகரில், கொரோனா வைரசை அகற்றும் பணிக்காக பெரிளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி 76 நாள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் நகரம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியது. இறுதியாக பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் பல வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா தொற்றால் பலவகையில் பாதிக்கப்பட்டுள்ள சீனா, “பீனிக்ஸ் போல” மீண்டு வரும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் ஏற்கனவே உள்ளூர் அரசாங்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட பகுதியின் தலைமை அதிகாரி ஜாங் யுக்சின், தொற்றுநோய் தடுப்பு முயற்சிகளில் அவர் தோல்வியடைந்துள்ளதாக கூறி, பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

நேற்றைய நிலவரப்படி, வுஹானில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. என்றாலும், புதிய சோதனைகள், நகரத்தின் முந்தைய புள்ளிவிவரங்களின் துல்லியம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

ஆசியாவின் பிற இடங்களில், இதற்கு முன்பு பெரும்பாலும் வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதாக கருதப்பட்ட தென் கொரியாவிலும், இந்த வாரத்தில், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இருந்த போதிலும், சியோலில் புதிய வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம், அது முடியும் வரை முடிவடையாது என்று சீனா அதிபர் மூன் ஜே-இன் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article