சென்னை; மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 5 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த 6 மருத்துவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் நடைபெற்றுள்ளது.
தனியார் மற்றும் அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக பல நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் கூட இதுபோன்ற புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக நோயாளியின் மகன் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவங்களும் அரங்கேறின.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில், தனியார் மருத்துவமனை மறுத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் 5 வயது சிறுவன் உயிரிழந்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் 6 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிரபல மருத்துவமனையான, ‘சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஏப்.26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 10 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு மே 6-ஆம் தேதி சிறுவன் இறந்தாா். தவறான சிகிச்சையால் தனது மகன் இறந்ததாக அவரது தந்தை அவினாஷ் ஆகவ், மருத்துவமனை மீது குற்றஞ்சாட்டியுள்ளாா். மேலும், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் மருத்துவமனை நிா்வாகம் அழித்துவிட்டதாகவும், சிகிச்சை தொடா்பான ஆவணங்களை தன்னிடம் தரவில்லை எனவும் அவா் குற்றம்சாட்டினாா்.
இதையடுத்து, தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் அா்ஜுன் பவாா், ஷேக் இலியாஸ், அஜய் காலே, அபிஜித் தேஷ்முக், துஷாா் சவான், நிதின் தானே ஆகியோா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பொலிஸாரின் முதல் தகவல் அறிக்கையின்படி, ஏப்ரல் 26 அன்று நகரின் சுட்கிர்னி பகுதியில் உள்ள வேதாந்த் மருத்துவமனையில் 5 வயது குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டது. அதே நாளில் சிறுவனுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 10 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த குழந்தை மே 6ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் மகன் உயிரிழந்ததாக சிறுவனின் தந்தை அவினாஷ் அகவ் குற்றம் சாட்டியுள்ளார். ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகவும், சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் தமக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
அதன்படி மருத்துவர்கள் அர்ஜூன் பவார், ஷேக் இலியாஸ், அஜய் காலே, அபிஜித் தேஷ்முக், துஷார் சவான் மற்றும் நிதின் அதானே ஆகிய மருத்துவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கவனக்குறைவு மற்றும் சாட்சியங்களை அழித்ததற்காக புதன்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.