டோக்கியோ: ஜப்பானில் இன்று மதியம் நடைபெற்ற 86 கிலோ எடைபிரிவு மல்யுத்தம் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா தோல்வி அடைந்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்  போட்டியில் இன்று மல்யுத்தம் தொடர்பான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற 86கிலோ எடை பிரிவின் காலிறுதிப்போட்டியில்,  இந்திய வீரர் தீபக் புனியா  நைஜீரியா வீரர் எகிரிகெரினியை 12-1 என்ற செட்டில் முன்னிலை வெற்றிபெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறினார்.  தொடர்ந்து, 6-3 என்ற கணக்கில் சீன வீரர்சூஷென் லின்  தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்குள் நுழைஙந்தார்.

இதைத்தொடர்ந்து இன்று மதியம் 86 கிலோ எடை பிரிவினருக்கான அரைஇறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா அமெரிக்காவின் டேவிட் டெய்லரை எதிர்கொண்டார். ஆனால், அவரை வெற்றிகொள்ள முடியாமல் தோல்வியடைந்தார். அதனால் தீபக் புனியா இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு தவறி உள்ளது.

இதன் காரணமாக அவர் அடுத்து சந்திக்க உள்ள  மற்றொரு போட்டியில் வெற்றிபெற்றால் வெண்கலம் பெறும் வாய்ப்பு உள்ளது.