டெல் அவிவ்
பிரபல கவர்ச்சி நடிகை மியா கலிபா இஸ்ரேல் போர் குறித்து தெர்வித்த் கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்து இரு ஒப்பந்தங்கள் ரத்தாகி உள்ளன.

ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தொடுத்த போர் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. உலக நாடுகள் பல ஹமாஸ் அமைப்பினருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. கவர்ச்சி நடிகை மியா கலிபா ஹமாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சில கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
மியா கலிபா,
“நாம் பாலஸ்தீனியர்கள் இத்தனை காலம் அடைந்த துன்பத்தைப் பார்த்தும், அவர்களுக்குத் துணையாக இல்லை என்றால் அதுதான் தவறு. யாராவது பாலஸ்தீனத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களிடம்,அவர்கள் படும் துயரத்தை ரெக்கார்ட் செய்யச் சொல்ல முடியுமா?”
என்று தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மியா கலிபா பாலஸ்தீன பயங்கரவாதிகளைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது கருத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவருடன் போட்டுள்ள தொழில் ரீதியான ஒப்பந்தங்களைக் கனடா நாட்டின் பிரபல வானொலி நிலையம் ரத்து செய்துள்ளது.
மேலும் அமெரிக்காவின் பிரபல பிளேபாய் நிறுவனமும் அவருடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறது. அந்நிறுவனம் பிளேபாய் பத்திரிகையில் அவரது பெயர், படங்கள் உள்ளிட்டவற்றை நீக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது.
[youtube-feed feed=1]