பிரார்த்தனை என்பது ஆத்மாவின் குரல்.

பிரார்த்தனை குறித்த JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்கப் பதிவு

பிரார்த்தனை என்பது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த ஓர் முக்கியக் கருவியாகும்.  கையாள முடியாத அளவு அதிகமான தடைகள் ஏற்படும்போது, ஆழ்ந்த பிரார்த்தனை அற்புதங்களை நிகழ்த்தும்.

என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள். என்ன செய்ய முடியாதோ, அதற்குப் பிரார்த்தனை செய்யுங்கள். எதுவாயினும், அந்த உயர்ந்த சக்திக்கே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உண்டு என்பதை அறிந்து பிரார்த்தனை மூலம் அந்த சக்தியினைத் தட்டி எழுப்ப முடியும்.

மனம் கூர்மையாக இருக்கும்போது, பிரார்த்தனை மேலும் அதிக சக்தியுள்ளதாகிறது.
நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். மனம் வேறெதிலோ மூழ்கியிருந்தால், அது பிரார்த்தனையே அல்ல.

வேதனை இருக்கும்போது அதிக ஈடுபாடு இருக்கும். அதனால்தான் மக்கள் வேதனையில் இருக்கும்போது பிரார்த்தனையில் மனதைத் திருப்புகின்றனர்.

பிரார்த்தனை என்பது ஆத்மாவின் குரல். பிரார்த்தனை என்பது  நீங்கள் நன்றியுணர்தலுடன் இருக்கும்போதும் நிகழ்கிறது.

நீங்கள் முற்றிலும் உதவியின்றி இருக்கும்போதும் நிகழ்கின்றது.

இரு நிலைகளிலுமே பிரார்த்தனைக்குப் பதிலளிக்கப் படுகின்றது. நிர்க்கதியாக இருக்கும்போது தானாகவே பிரார்த்தனை தோன்றுகிறது.

நீங்கள் பலவீனமாக இருக்கும்போது இறைவன் உங்களுடனேயே இருக்கிறார்.
நீங்கள் உங்கள் வரையறைகளை, எல்லைகளைத் தொட்டுக் கொண்டிருக்கும் தருணமே பிரார்த்தனை என்பதாகும்.

பிரார்த்தனை என்பது நுண்ணிய உணர்வு நிலையிலேயே உள்ளது, பிரார்த்தனை என்னும் செயலே, மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியுள்ள

உங்கள் பிரார்த்தனையில் உண்மையாக இருங்கள். பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்கப்பட வேண்டுமானால், உங்கள் விருப்பம் தீவிரமாக இருக்க வேண்டும்.
தீவிர விருப்பங்கள் உங்களுக்கும் இறைசக்திக்கும் தொடர்பை ஏற்படுத்தும். முழு ஈடுபாட்டுடன் பிரார்த்தனை செய்யும் பொழுது, உங்களைச் சுற்றி இறைமையின் இருப்பை உணர்வீர்கள்!
இறைசக்தியிடம் கேட்பதை அடைய அவசரப் படாதீர்கள்.இறைசக்தியிடம் ஓர் வரம் பெற வேண்டும் என்னும் நோக்கம் இருக்கும்போது, நீங்கள் அவசரப் படுகின்றீர்கள்.

ஆனால், இறைசக்தியே உங்களுக்குச் சொந்தம் என்று அறியும்போது, இறைசக்தியிடமிருந்து எதையும் அடையும் அவசரமில்லை.

தொடர் பிரார்த்தனை இறைசக்தியுடன் உங்கள் உறவைப் பலப்படுத்துகிறது.